நான் அவருடைய பெரிய FAN" - பிரபல இயக்குநரை புகழ்ந்த 'மாஸ்டர்' நடிகை.
துனுக்குகள்
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில்
- தனது ட்விட்டர் தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோஹனன்
- அவருடைய படங்களின் மிகப்பெரிய ரசிகை நான்" என்று பதில்
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான 'பட்டம் போலே' என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்த நடிகை தான் மாளவிகா மோஹனன். மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த மாளவிகா ரஜினிகாந்தின் ‘பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் ‘தளபதி' விஜய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுவருகிறார்.
தற்போது, ரவி உத்யவர் இயக்கும் புதிய ஹிந்தி படத்தில் சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தி நடிக்க, பெரும் ஊதிய தொகுப்புடன் கையெழுத்திட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் இந்த லாக் டவுன் காலத்தில் பல சிறப்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அசத்தி வருகின்றார்.
தனது ட்விட்டர் தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோஹனன் தன்னுடைய ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வருகின்றார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி #Askmalavika என்ற தலைப்பில் ரசிகர்களுடன் அவர் உரையாடியபோது நீங்கள் எந்த இயக்குநரோடு பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று நெட்டிசன் ஒருவர் கேட்டபோது "வெற்றிமாறன் சார், அவருடைய படங்களின் மிகப்பெரிய ரசிகை நான்" என்று பதில் அளித்துள்ளார்..

Comments
Post a Comment