விஜய் 65வது படத்தின் நாயகி இவர்தானா?- உறுதியாக சொல்லப்படும் செய்தி, சூப்பர் ஜோடி தான்
இளைய தளபதி விஜய் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி மாணவராக வேறு நடித்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி பட்டய கிளப்பியுள்ளது.
படப்பிடிப்பு கொஞ்சம் மீதம் உள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சில நடந்துகொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு நடுவில் தளபதியின் 65வது படம் குறித்த செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 4வது முறையாக முருகதாஸ் விஜய்யை இயக்க இருக்கிறார், படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள், இது பழைய தகவல் தான்.
புதிய விஷயம் என்னவென்றால் விஜய்யின் இந்த 65வது படத்திற்கு நாயகி தமன்னா என்று கூறப்படுகிறது. ஆனால் இது உறுதியான கூட்டணியா என்பது தெரியவில்லை.
தமன்னா இதற்கு முன் தளபதியுடன் சுறா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment