சன் பிக்சர்ஸ் விவகாரம்.. சம்பள விஷயத்தில் திடீரென தல அஜித்தை பின்பற்ற முடிவு பண்ணிய விஜய்
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நாயகர்களில் ரஜினியை அடுத்து தளபதி விஜய் தான் உள்ளார். கடைசியாக தர்பார் படத்தில் ரஜினிகாந்த் 104 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தளபதி65 படத்திற்காக விஜய் 100 கோடி சம்பளம் பேசி உள்ளார்
இதெல்லாம் கொரோனாவுக்கு முன்பு. ஆனால் தற்போது நிலைமையே வேறு. அனைவரும் தங்களது சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து நடிகர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்
அந்த வகையில் அண்ணாத்த படத்திற்காக ரஜினி தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்ததை தொடர்ந்து தளபதி65 படத்திற்காக விஜய்யிடமும் சம்பளத்தை குறைக்க சொல்லி தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்

இனிமேல் சம்பள விஷயத்திலும் தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் தல அஜித்தை பின்பற்றப்போவதாக தளபதி விஜய் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தல அஜித் எப்போதுமே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடி போகமாட்டார்.
கடந்த சில வருடங்களாக தல அஜித் அந்த பாலிசியை தான் கடைபிடித்து வருகிறார். தற்போது விஜய்யும் அதே ரூட்டில் பயணிக்க உள்ளார். இனி தன்னுடைய படங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கிடையாது என உறுதி செய்துள்ளாராம்
அதுமட்டுமில்லாமல் கொடுக்கும் சம்பளத்தை முழுமையாக வெள்ளையில் கொடுக்குமாறும் தன்னுடைய அடுத்தடுத்த தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்து வருகிறாராம். முக்கிய இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் விஜய் இனி எந்த ஒரு சறுக்கலையும் சந்தித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம்
Comments
Post a Comment